மேல் மாகாணத்திற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்து பஸ் சேவைகளும் அடுத்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை நிறுத்தப்படும் என்று இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஏனைய பகுதிகளில் மேற்கொள்ளும் பஸ் சேவைகள் சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு உட்படுத்தி வழமை போல் இடம்பெறும் எனத் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், மேல் மாகாணத்திற்கு வெளியே பயணிகள் தேவைகளுக்கு ஏற்ப நீண்ட தூர பஸ் சேவை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் போக்குவரத்து நடவடிக்கைகள் தற்போது, வழக்கம் போல் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.