தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலைத் தமிழ் மக்கள் நினைவுகூறுவதற்குப் பொலிஸார் ஊடாக நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தடையினை ஜனாதிபதி உடனடியாக நீக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றோம் என வடமாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
தற்போது அரசியல் பரப்பில் தியாகி திலீபனின் நினைவு தினத்தை அனுஸ்டிப்பது தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன.
இந்நிலையில்,தியாகி திலீபனின் நினைவு தினத்திற்கு நீதிமன்றம் மூலமாக தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.