தற்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தி யாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த பகுதிகளுக்கு வேறு எவரும் உள் நுழை யவோ அல்லது வெளியேறவோ அனுமதி வழங்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களை விநியோகித்தல் மற்றும் மருந்து விநி யோகித்தல் ஆகியவற்றிற்கு எந்தவிதமான தடையும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த பகுதிகளுக்கு அனுமதி இன்றி உள் நுழைவோர் மற்றும் வெளியேறுவோர்களுக்கு எதி ராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
எவ்வாறாயினும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து ஊழியர் ஒருவரை அத்தியாவசிய சேவைக்காக அழைக் கச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் அனு மதி பெறப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
27 பொலிஸ் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரும் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கிராம சேவக பிரிவுகள் பல தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.