கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் நாதன் பிலிப்ஸ் சதுக்கத்தில் நடக்கும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உள்ளிட்ட குளிர்கால கொண்டாட்ட நிகழ்வுகள் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம் என ரொறன்ரோ மேயர் ஜான் டோரி தெரிவித்துள்ளார்.
இந்த வாரம் ரொறன்ரோ நகரத்தில் தினமும் பல நூறு புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன.
மேலும் மாகாணத்தில் வெளிப்புறக் கூட்டங்களின் அளவு 25 ஆகக் குறைக்கப்பட்ட நிலையில், இவ்வாறான நடவடிக்கைகளை எடுப்பதை விட வேறு எந்த வழியும் இல்லை என்றும் டோரி கூறினார்.
“இது நடக்காது என்ற உண்மையை மக்கள் நம்ப வேண்டும், ஏனென்றால் இந்த நேரத்தில் அத்தகைய ஒரு சூழ்நிலையை எங்களால் முன்கூட்டியே கணிக்க முடியாது, என்று டோரி மேலும் குறிப்பிட்டார்.
குளிர்காலத்தில் திட்டமிடப்பட்ட றோயல் குளிர்கால கண்காட்சி, நினைவு நாள் நிகழ்வுகள் மற்றும் சாண்டா கிளாஸ் பரேட் போன்ற பிற நிகழ்வுகளும் ரத்துச் செய்யப்படும் நிகழ்வுகளில் அடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.