கனடாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 1,453 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கனடா சுகாதாரத்துறை தரப்பில் கூறும்போது, கனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 1,453 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,53,125 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே கனடாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் கனடாவில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு 9,268 பேர் பலியாகி உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குபெக் மற்றும் ஒண்றாறியோ நோய் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கனடாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.